தனிமைப்படுத்தல் மையங்களுக்கு செல்லும் முதியவர்களுக்கு முதற்சலுகை- இந்து இயக்கம் இயக்கம் பாராட்டு

Health, Malaysia, News

 281 total views,  2 views today

பட்டவொர்த்-

டி.ஆர்.ராஜா


கோவிட்-19 தனிமைப்படுத்தல் மையங்களுக்குச் செல்லும் மாநில மூத்தப் பிரஜைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்ற பினாங்கு மாநில முதலமைச்சரின் உத்தரவில் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று பினாங்கு இந்து இயக்கம் தெரிவித்தது.

இதற்கு மேலும் இன்னும் கூடுதல் சலுகைகளாக ஒவ்வொரு முதியவர்களின் வீடுகளுக்கே சென்று நோய் தடுப்பு மருந்துகளை செலுத்த வேண்டும் என்று பினாங்கு இந்து இயக்கத் தலைவர் ப.முருகையா கேட்டுக் கொண்டார்.

முதியோர்கள் வீட்டிலிருந்து வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேதனையை அறிந்து மருத்துவர்கள் செயல் பட வேண்டும். இதன்வழி பலதரப்பட்ட முக்கியமாக வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளான ‘புற்று நோயாளிகள், படுக்கையில் சிகிச்சை பெறுபவர்கள், சிறு நீரகம் பாதித்தவர்கள், தோல் நோயாளிகள், கண் தெரியாதவர்கள், மூளை வளர்ச்சிக் குன்றியவர்கள் போன்ற எல்லா வயதினருக்கும் இது பேருதவியாக இருக்கும்.


சிலாங்கூர் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இப்படிபட்டவர்களுக்கென்று தனியொரு மருத்துவக்குழு அமைத்து செயல்படுவது போல இங்கும் பினாங்கு மாநில பிரஜைகளுக்கும் அரசு மருத்துவர்களுடன் சமூக நல அதிகாரிகளும் இணைந்து செயல்படுத்தினால் பேருதவியாக இருக்கும். இந்த நோயை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியும் என்பதோடு பினாங்கு மக்களை அதிகப் பாசத்துடன் பாதுகாக்கும் அரசு என்று மக்களின் பாராட்டை பெற முடியும் என்று பினாங்கு இந்து இயக்கம் நம்புவதாக அதன் தலைவர் திரு ப.முருகையா தெரிவித்தார்.

Leave a Reply