தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்தின் மீது ரூ.2 லட்சம் கடன்

India, News

 198 total views,  1 views today

சென்னை-

தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் அதிமுக அரசு கடந்த 2011இல் பொறுப்பேற்றதில் இருந்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும், தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்தது. தற்போது திமுக ஆட்சியை பொறுப்பேற்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டு சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கலுக்கு முன் வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, இன்று 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டார்.
கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் பெருமளவு சரிந்துவிட்டது. ஏற்கனவே தமிழகம் பொருளாதாரம் பலவீனமாக இருந்தநிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply