தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தபோது கேள்வி எழுப்பினார பேராசிரியர் இராஜேந்திரன்? – தியோ கேள்வி

Malaysia, News, Politics

 213 total views,  1 views today

கோலாலம்பூர்-

தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டமிடல் பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் தமிழ்ப்பள்ளிகளுக்கான உண்மையான போராளி என்பதை காட்டிலும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தீவிர கைக்கூலியாக செயல்படுகிறார் என்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் சாடினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் தொடர்பில் பொய்யான தகவல்களை பேராசிரியர் இராஜேந்திரன் முன் வைக்கிறார்.


14ஆவது பொது தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஓர் அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டது என்றுதான் கூறவேண்டும்.13 தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகள் அறிவிப்பு குறித்து அத்தகைய ஒதுக்கீடுகள் பற்றி கல்வி அமைச்சுக்கு தெரியாது. சமூகத்திற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வெ.39.9 மில்லியன் என்பது வெற்று வாக்குறுதியாகும். சமூகத்தை முட்டாளாக்க நஜிப்பும் மஇகாவும் 2018இல் செய்த தேர்தல் நாடகம் தான் இது. இந்தத் திட்டங்களுக்கு தேசிய முன்னணி அரசாங்கம் எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

அறிவிக்கப்பட்ட 39.9 மில்லியன் வெள்ளி , 2018இன் தேர்தலுக்கு முன் கல்வி அமைச்சிற்கு பள்ளிகளின் திட்டங்களுக்கான எதுவும் வழங்கப்படவில்லை.


2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தமிழ்ப்பள்ளி திட்டங்களையும் தொடர நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை அமைத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், உண்மையில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி, ரிஜண்ட் தமிழ்ப்பள்ளி, கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் கிளேபாங் தமிழ்ப்பள்ளி, இ‌ன்னு‌ம் பல பள்ளிகளுக்கு கட்டடத் திட்டங்களுக்கு உதவ கூடுதல் நிதி வழங்கியுள்ளோம்.


2019 இல் நான் இருந்த காலத்தில், நான் கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு RM 2.6 மில்லியன் ஒதுக்கீடு செய்தேன் மற்றும் முதல் கட்டத் தொகையாக RM 1 மில்லியன் வழங்கினேன். ஆனால், தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட RM1.5 மில்லியனை வழங்க விரும்பவில்லை. அப்படியானால் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியை தடுப்பது யார்?

இதேபோல் பிலோமினா தமிழ்ப்பள்ளிக்கு வெ. 2.6 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் ஆரம்ப ஒதுக்கீடு RM2.3 மில்லியன் மட்டுமே. மகிழம்பூ தமிழ்ப்பள்ளி பணியை முடிக்க கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல், பக்காத்தானின் கீழ் உள்ள சிலாங்கூர் அரசாங்கம்  சிலாங்கூர் மற்றும் பினாங்கில் உள்ள 97 பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வெ.5 மில்லியன் நிதியை 25 பள்ளிகளுக்கு  வெ.1.7 மில்லியன் ஒதுக்கியது. இவை அனைத்தும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை கைப்பற்றியதும் நடந்தது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு பக்காத்தான் போதிய அளவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவது பொய் மட்டுமல்ல, முழு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கொண்டது.


என்.எஸ்.ராஜேந்திரன் தாய்மொழி பள்ளிகளுக்கான உண்மையான போராளி என்பதை விட தேசிய முன்னணியின் அரசியல்வாதி என்பதே நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி, ஷெரட்டன் நடவடிக்கைக்குப் பிறகு, தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டில், தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ. 29.98 மில்லியன் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிலிருந்து வெ. 20 மில்லியன் குறைக்கப்பட்டது. ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தால் வெ.50 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


2022-ஆம் ஆண்டில், 2022 பட்ஜெட்டின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு RM34.79 மில்லியன் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. வெறும் 2 ஆண்டுகளில், ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 35.23 மில்லியன் ஒதுக்கீட்டை இழக்கிறது எனலாம். பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன் ஒரு உண்மையான, பாரபட்சமற்ற கல்வியாளர் என்றால், தேசிய கூட்டணிஅரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்த போது அவர் குரல் எழுப்பினாரா? என்று தியோ ஓர் அறிக்கையின் வழி கேள்வி எழுப்பினார்.

Leave a Reply