தமிழ்ப்பள்ளி பிரச்சினைகளை புதிய அரசு ஆய்வு செய்ய வேண்டும்-டத்தோஶ்ரீ புலவேந்திரன்

Malaysia, News, Politics

 134 total views,  1 views today

டி. ஆர்.ராஜா

பெர்மாத்தாங் திங்கி-

நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் நேரடி ஆய்வு மேற்கொண்டு அப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் மாநில துணைத் தலைவரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியக்குழு தலைவருமான டத்தோஶ்ரீ  க.புலவேந்திரன் வலியுறுத்தினார்.

நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், தமிழ்ப்பள்ளிகள் விவகாரங்களில் புதிய அரசு அதீத அக்கறையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுச் செல்ல தமது அமைச்சரவையில் இந்தியர் ஒருவரை கல்வி அமைச்சர் அல்லது துணை அமைச்சராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்க வேண்டும் எனவும்  ட த்தோஶ்ரீ புலவேந்திரன் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில்  தமிழ்ப்பள்ளிகளும் தமிழ் கல்வியும் இந்நாட்டு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அதன் அடிப்படையில் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் புதிய உருமாற்றத்தை காண ஒற்றுமை அரசாங்கம் வழி வகுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply