தமிழ்மொழியை புறக்கணிக்கவில்லை; அநாகரீகம் வேண்டாம் – டாக்டர் சத்திய பிரகாஷ்

Malaysia, News, Politics

 124 total views,  1 views today

ரா.தங்கமணி

உலு சிலாங்கூர்-

உலு சிலாங்கூர் தொகுதியில் தொங்கவிடப்பட்டுள்ள தமது தீபாவளி வாழ்த்து பதாகையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்று உலு சிலாங்கூர் பிகேஆர் கட்சி தொகுதித் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

தமது தீபாவளி வாழ்த்து பதாகையை வடிவமைத்தவர் ஆங்கில மொழியை மட்டுமே வைத்து வடிவமைத்து அச்சிடப்பட்டு வந்த நிலையில் அதன் பின்னர் தேசிய மொழியும் தமிழ் மொழியும் வைத்து வடிவமைக்கப்பட்ட பதாகைகள் அச்சிடப்பட்டன.

பின்னர் இரு பதாகைகளுமே ஒருசேர தொங்கவிடப்பட்ட நிலையில்  அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட பதாகையை மட்டும் வைத்துக் கொண்டு என்னை வஞ்சிப்பது நியாயமாகாது.

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்காக  என்னை வஞ்சிப்பதை ஏற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எவ்வளவோ சமூகச் சேவைகள் செய்தௌ வந்தபோதெல்லாம் துளியும் பாராட்டாதவர்கள் இதற்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன்?

போதாக்குறைக்கு தமிழ்ப்பற்று, கலாச்சாரம், பாரம்பரியம் என அடுக்கிக் கொண்டே போகிறவர்கள் கொஞ்சம் கூட நாகரீகமல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை  வஞ்சிப்பதுதான்  தமிழ்மொழியின் நாகரீகமா?

தீபாவளி வாழ்த்து பதாகையில் தவறு நிகழ்ந்து விட்டது. அது சுட்டிக்காட்டப்பட்ட பின் திருத்தம் செய்யப்பட்டது. அதே போன்று என்னை வஞ்சிப்பவர்கள் நாகரீகமான முறையில் தவறுகளை சுட்டிக் காட்ட முயலுங்கள். அதை விடுத்து நாகரீகமற்ற வார்த்தைகள் உபயோகப்படுத்தினால் பின்னாளில் நாகரீகமற்ற மொழியாக தமிழ்மொழி பிரறால் அடையாளப்படுத்தப்படும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.

விளம்பரம்

Leave a Reply