தம்புனில் போட்டியிடுகிறாரா அன்வார்?

Malaysia, News, Politics

 84 total views,  1 views today

ஈப்போ-

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் உட்பட இதர இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் தம்புனில் போட்டியிட வேண்டும் என்று பேரா பக்காத்தான் ஹராப்பான் நெருக்குதல் கொடுத்து வருகிறது. இது மட்டுமல்லாது கிள்ளான் பள்ளதாக்கில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

தம்புனில் டத்தோஶ்ரீ அன்வார் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காகவே வரும் 20ஆம் தேதி பேரா, ஈப்போவில் நடைபெறும் பிஎச் சிறப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.

20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தாம் தம்புனில் போட்டியிடவிருப்பதை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Reply