தம்பூனில் அன்வார் போட்டியிடட்டுமே ! – அகமாட் ஃபைஸால் அசுமு

Malaysia, News, Politics

 261 total views,  1 views today

ஈப்போ – 21 ஆகஸ்டு 2022

பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் உட்பட யார் வேண்டுமானாலும் தம்பூன் நாடாளுமன்றத்தில் போட்டியிட வரவேற்பதாக பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் அகமாட் ஃபைஸால் அசுமு தெரிவித்தார்.

மக்களாட்சியை நிலை நாட்டும் நாட்டின் 15 பொதுத் தேர்தலில் யார் தம்மை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்டாலும் தமது நிலையை அவ்வகையிலும் அசைக்க முடியாது என அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

“தகுதி பெற்ற யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதனை நான் வரவேற்கிறேன். அதே சமயம், இத்தொகுதி மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் என்னை நிச்சயம் ஆதரப்பார்கள்.”

உடலில் உயிர் இருக்கும் வரை, புயலே வந்தாலும் இங்கிருந்து போகமாட்டேன்.  

முன்னதாக, தம்பூனில் தாம் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை எனவும் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் கடந்த 11ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

Leave a Reply