தலைக் கவசம் உயிர் கவசம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 88 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சாலை விபத்துகளில் தங்களை பலி கொடுத்து விடக்கூடாது. மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது தலைக் கவசம் அணிந்திருப்பது அவசியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இங்கு நடைபெறும் சாலை விபத்துகளில் வாகனமோட்டிகளை விட மோட்டார் சைக்கிளோட்டிகளே அதிகம் மரணிக்கின்றனர். இவ்வாறு குடும்பத்தில் ஒருவர் மரணிக்கும்போது அந்த குடும்பம் பின்னாளிள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

சாலை விபத்துகளில் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. சாலை பயணத்தின்போது எவ்வளவு விழிப்புடன் இருக்கிறோமே அதேபோன்று பாதுகாப்பு கவசங்களை அணிந்து பயணிப்பது அவசியமானது.

மோட்டார் சைக்கிளோட்டிக்கு தலை கவசமே பிரதானமானது. தலைக் கவசம் உயிர் கவசம் ஆகும். விபத்துகளில் சிக்கும்போது தலையில் அடிபடாமல் நம்மை தற்காக்கிறது இந்த தலைக் கசவம் தான். அதன் அடிப்படையிலேயே சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள இளைஞர்களுக்கு 1,200  தலை கவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

இன்னும் அதிகமானோருக்கு தலை கவசங்கள் தேவைபடுவதை உணர்ந்து இன்னும் 2,000 தலைக் கவசங்கள் வரும் காலங்களில் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று டான்ஶ்ரீ  விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் அரேனா வளாகத்தில் நடைபெற்ற தலை கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டத்தோ சூல்கிப்ளி, பிரதமரி சிறப்பு செயலாளர் டத்தோ எஸ்.ஆனந்தன், சுங்கை சிப்புட் மஇகா தலைவர் கி.மணிமாறன், மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள், சுங்கை சிப்புர் மக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம் 

Leave a Reply