தலைமையாசிரியரின் ஆணவ அதிகாரத்தில் தொடரும் விதிமீறல்கள் ! – பின்னணியில் இருக்கும் அந்த கருப்பு ஆடு யார் ?

Crime, Malaysia, News, Polls, Special News, Tamil Schools

 174 total views,  1 views today

கோம்பாக் – 24 ஏப்பிரல் 2022

அண்மையில் இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு இலக்காகி பெரும் சர்ச்சையை ஏற்பாடுத்தி இருக்கும் வேளையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் அதிகார முறைகேடலினால் பல விதிமீறல்கள் நேர்ந்துள்ளன குறித்து பல ஆதாரங்கள் தற்போது ஐ சேனலின் வசம் சிக்கி உள்ளன.

ஒரு பள்ளியைக் குறித்து அதன் தலைமை ஆசிரியர் – அதாவது அரசாங்க அதிகாரி பொது ஊடகங்களுக்குத் தமது கருத்தை வெளியிட கல்வி அமைச்சரின் அல்லது கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விதிமுறை.

ஆனால், இந்த விதிமுறைகளை மீறி தன்மூப்பாக ஊடகத்திற்கு அவ்வாறு செய்துள்ளார். விதிமீறல் ஒரு புறம் இருக்க, அரசாங்க அலுவலகம் தொடர்பாக பொது வெளியில், குறிப்பாக ஊடகத்தில் ஏதேனும் வெளியிட வேண்டும் என்றால் பதிப்புரிமை அனுமதியும் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். இஃது அரசாங்கத்தின் வழிகாட்டல்.

இவை அனைத்தையும் மீறிதன் விளைவு தான் அப்பள்ளி தொடர்பான பாலியல் தொல்லை விவகாரம்.

அப்பள்ளியில் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் இரு பெண் ஆசிரியர்கள் Senamrobik நடனம் அங்கத்தை வழிநடத்தினர். அதற்கான ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர். ஆனால், குறிப்பிட்ட ஓர் ஆசிரியரை மட்டும் காணொலி பதிவு செய்ததன் காரணம் என்ன என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இது தற்செயலாக நடந்த சம்பவம் என மூடி மறைக்க முயற்சி செய்யப்படும் நடவடிக்கை அரங்கேறுவதும் ஐ சேனலுக்கு அப்பள்ளியைச் சார்ந்த நம்பத்தகுந்த நபர் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

தற்செயலாக எடுக்கப்பட்டக் காணொலி என்றால்

  • அந்தக் காணொலியில் மற்றோர் ஆசிரியர் ஏன் இடம்பெற வில்லை ?
  • குறுப்பிட்ட ஓர் ஆசிரியரை அவரது பின்னாலில் இருந்து மட்டும் காணொலி பதிவு செய்யப்பட்டது ஏன் ?
  • குறிப்பிட்ட ஒரு பெண் ஆசிரியரின் மாண்புக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும் தவறான முறையில் எடுக்கப்பட்டக் காணொலியை பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைமை ஆசிரியர் பொது ஊடகத்திற்குக் கொடுக்கும் முன் சரி பார்த்தாரா ?
  • அரசாங்க அதிகாரியான அவர் பொது ஊடகத்தில் கருத்தையோ அல்லது தகவலையோ வெளியிட கல்வி அமைச்சரிடம் / அமைச்சிடம் அனுமதி பெற்றாரா ?

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ‘இல்லை’ எனும் ஒற்றைச் சொல்தான் பதிலாக இருப்பதும், அதன் விளைவாக, அப்பள்ளி தொடர்பான பாலியல் தொல்லை விவகாரம் வெளியில் வரக் காரணம் என்பதும் ஐ சேனல் சிறப்பு செய்திக் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் அத்தலைமை ஆசிரியரை எதிர்த்துக் கேள்வி கேட்டப் பாதிக்கப்பட்ட ஆசிரியரை மேலும் அவமானப் படுத்தும் வகையில் அவதூறானக் கருத்துகளை பள்ளிக்கு வெளியில் இருக்கும் சிலரிடம் தெரிவித்தது குறித்து காவல் துறை புகாரோடு ஐ சேனல் சிறப்பு செய்திப் பிரிவின் வசம் கிடைத்துள்ளது.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு எதிராக இருக்கும் அதே வேளையில் தவறு செய்த – காணொலியை முறையற்றத் தனமாகப் பதிவு செய்த – பல புகார்களைக் கொண்ட ஆசிரியர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும் மர்மம் என்ன ?

அதிகார முறை கேடல் செய்யும் தலைமை ஆசிரியர் மீதும் பாலியல் தொல்லைகளைக் கொடுக்கும் ஆசிரியர் மீதும் பல பெற்றோர்களால் கொடுக்கப்பட்டப் புகார்கள் என்னவாகின ?

பாதிக்கப்பட்ட ஆசிரியர் இருக்கும் அதே பள்ளியில் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் தொடர்ந்து பணியில் நீட்டிப்புக்குப் பன்முனை உதவி கிடைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால் பல பெண் மாணவர்களின் பெற்றோர்களின் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் வருத்தத்திலும் அச்சத்திலும் இருப்பதும் ஐ சேனலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இவர்களின் தவறுகள், அதிகார முறைகேடல்கள், புகார்கள் யாவும் மறைக்கப்பட்டப் பின்னணியில் கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளத் தகவல் கிடைத்துள்ளது.

யார் அந்தக் கருப்பு ஆடு ?

ஐ சேனல் விரைவில் வெளிச்சம் போட்டுக் காட்டும் !

Leave a Reply