‘தவளை அரசியலை’ ஜசெகவினர் முன்னெடுத்ததில்லை- கணபதிராவ்

Malaysia, News, Politics

 230 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்த ஜசெக ஆளும்கட்சியாக வர முடியாது என கொக்கரித்தவர்களுக்கு மத்தியில் 2008ஆம் ஆண்டு பினாங்கு, சிலாங்கூர் போன்ற சில மாநிலங்களில் ஆளும்கட்சியாக உருவெடுத்தது ஜசெக.

அதேபோன்று 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் புத்ராஜெயாவை கைப்பற்றி ஆளும் கட்சியாக மாறியது ஜசெக என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.


ஜசெகவின் பல ஆண்டுகால போராட்டத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு தவளை அரசியலால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி வீழ்த்தப்பட்டாலும் இன்னமும் வலுவான கட்சியாகவே ஜசெக திகழ்கிறது.


பின்புற வாயிலாக ஆட்சியை கைப்பற்றிய சில துரோகிகளுக்கு மத்தியில் தவளை அரசியலில் ஜசெகவினர் யாரும் ஈடுபடவில்லை. மக்களுக்கான நம்பிக்கையிலிருந்து ஜசெக ஒருபோதும் விலகவில்லை என்பதற்கு அதுவே உதாரணமாகும்.


இதனிடையே, ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தீவிர அசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் கால சூழலுக்கு ஏற்ற அவரின் முடிவை ஏற்க வேண்டும். அதே வேளையில் அவர் கட்சிக்கு ஆலோசனைகளை வழிகாட்டிகளையும் வழங்குவர் என்ற நம்பிக்கை உள்ளது என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

Leave a Reply