தாப்பாவில் தொடர எண்ணும் சரவணன்

Malaysia, News, Politics

 49 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 11 செப் 2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்க எண்ணம் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ மு சரவணன் தெரிவித்துள்ளார்.

மனிதவள அமைச்சருமான அவர் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கயில், கோவிட்-19 காலம் உட்பட அத்தொகுதியில் தமது சேவையை அங்குள்ள மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

இருந்தாலும் இறுதி முடிவு கட்சியின் தலைவரின் கையில் இருப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. போட்டியிட விரும்பினால், அதற்கு மாற்றாக வேறொரு தொகுதியைக் கொடுத்து மாற்றிக்கொள்ள ஜோகூர் மாநில அம்னோவின் துணைத் தலௌவர் நுர் ஜஸ்லான் முகம்மட் குறிப்பிட்டிருந்தார்.

பூலாய் தொகுதியில் அம்னோ தலைவருமான நுர் ஜஸ்லான் தெரிவிக்கயில், மலாய்க்காரர்கள் பெரும்பான்மை இருக்கும் தாப்பா தொகுதியில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதால், அம்னோவுக்கு ம.இ.கா. வழிவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இருப்பினும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்யும் முழு உரிமை தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடியிடம் இருக்கின்றது. அதனை கட்சியின் தலைமைத்துவத்திடம் ஒப்படைப்பார் என டத்தோ ஶ்ரீ மு சரவணன் தெரிவித்தார்.

Leave a Reply