தாப்பாவில் மீண்டும் நானா? முடிவு தலைவரின் கையில்- டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News, Politics

 103 total views,  1 views today

கோலாலம்பூர்-

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேனா? என்பது எனக்கு தெரியாது. அது கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கையில் உள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

15ஆவது பொதுத் தேர்தல் காலம் நெருங்கி கொண்டிருக்கும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுவேனா? என்பதை கட்சித் தலைவர் முடிவை பொறுத்தது என்பதால் அது குறித்து இப்போது கருத்துரைக்க முடியாது.

அதே வேளையில் மஇகா வேட்பாளர் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுகின்றனர் என்பதை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பார்.

சில தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டது எனவும் சில தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது எனவும் டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 3 தவணையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் டத்தோஶ்ரீ  சரவணன் 4ஆவது முறையாக அங்கு போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply