
தாப்பா மக்களுக்கான சிறந்த கல்வித்தளம் !
215 total views, 1 views today
தாப்பா – 30/10/2022
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்
மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை
கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
– மூதுரை
கல்வி மட்டுமே ஒருவனுக்கு வெற்றியைத் தேடித்தர முடியும் எனும் தாரக மந்திரத்தை நன்கு உணர்ந்தவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன். அதனாலேயே தாப்பா மக்களுக்கான கல்வியில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்.
ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாப்பாவில் இருந்தபடியே கல்விகற்க முடியும். அதற்குச் சான்றாகத் தொடக்கப் பள்ளிகளும், இடைநிலைப்பள்ளிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய கட்டிடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய பாலர்பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மலாய்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் என 39 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 7 இடைநிலைப்பள்ளிகளில், அறிவியல் உயர்நிலைப் பள்ளியும், தங்குமிட வசதியோடு கூடிய பள்ளியும் உண்டு.
உயர்கல்விக்குத் தாப்பாவில் மாரா தொழில்நுட்பக் கல்லூரி, தாப்பா Kolej Komuniti, HRDC மனிதவள மேம்பாட்டு நிறுவனப் பயிற்சி மையம் என உயர்கல்விக்கான வாய்ப்புகள் நிரம்பிக் கிடக்கின்றன. கல்வியில் சிறந்து விளங்காத மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற பயிற்சிகள், தொழிற்கல்விகள் என தங்களை உயர்த்திக் கொள்வதற்கான உயர்கல்விகள் உண்டு.
இவை நிரந்தரமாக தாப்பாவில் இருப்பவை. இதைத்தாண்டி திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், சிறுதொழில் பயிற்சிகள், தொழிநுட்பக் கல்விகள் என அவ்வப்போது பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இவையாவும் தாப்பா மக்கள் எந்த வகையிலும் கல்வியில் பின் தங்காமல் இருக்கவும், வேலைச்சந்தைக்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்தவும் பேருதவியாக அமைந்து வருகின்றன.


உலகம் தொழிற்புரட்சி 4.0த்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், மறுதிறன் பயிற்சிகள் என உலக மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்வது மிகமிக முக்கியம். மனிதவள அமைச்சராக இந்த மாற்றத்திற்கு ஏற்ப தொழிலாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர், தாப்பா மக்களும் இந்த மாற்றத்தில் விடுபடாமல் இருக்க அதற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறார்.
மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி மையம் தாப்பாவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியான பயிற்சிகளும், சமூக மேம்பாட்டுத் திட்டங்களும் இடம்பெற வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆக கல்விகற்ற தாப்பா மக்களை உருவாக்குவதில் கடந்த 14 வருடங்களாக அனைத்து முயற்சிகளையும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ மு சரவணன் அவர்கள் மேற்கொண்டுள்ளார், மேற்கொண்டும் வருகிறார்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
– குறள் 400