தாப்பா மக்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என பார்த்துப் பார்த்துச் செய்து வருகிறார் டத்தோ ஶ்ரீ சரவணன்

Malaysia, News, Politics, Polls

 31 total views,  1 views today

– குமரன் –

தாப்பா – 6/11/2022

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக அத்தொகுதியை ம.இ.கா. – தேசிய முன்னணியின் உறுதியானக் கோட்டையாக நிலைபெறச் செய்திருக்கும் டத்தோ ஶ்ரீ சரவணன் இம்முறையும் அங்கு களத்தில் இறங்குகிறார்.

6 முனை போட்டி அங்கு நடந்தாலும்கூட, தமது வெற்றியை அவர் அங்கு நிலை நாட்டுவதாக மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவருமான அவர் சொன்னார்.

அதே தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் சரஸ்வதி, தேசியக் கூட்டணி வேட்பாளர் முகம்மது யட்சான், வாரிசான் வேட்பாளர் முகம்மது அக்பர் ஷெரிஃப், பெஜுவாங் வேட்பாளர் மியோர் ஆகியோருடன் சுயேட்சையாக கதிரவனும் டத்தோ ஶ்ரீ சரவணனை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுவைத் தக்கல் செய்துள்ளனர்.

தாப்பா மக்களுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதைத் தாம் நன்கு புரிந்து வைத்திருக்கும் டத்தோ ஶ்ரீ சரவணன் மக்கலின் தொடர் ஆதரவால் இன்னும் இங்கு நிலைத்திருக்க முடிகிறது என்றால் மிகையாகாது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தேர்தல் தேதி குறிப்பிடுவதற்கு முன்னதாகவே இங்குள்ள இந்தியர்களுக்காக தீபாவளி கலை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.அது சரியாக வேட்புமனு நாளன்று அமைந்துவிட்டது தற்செயலானதாகும்.

தாப்பா மக்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என பார்த்துப் பர்த்துச் செய்கிறேன். தாப்பா மக்களின் மனமகிழ்ச்சிக்காக கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற அம்சங்களும் தேவை என்பதை மறக்கவில்லை. உணமையில் மக்கள் ஆரவாரத்துடன், மிகவும் மகிழ்ச்சியாக தீபாவளி இசை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்

உள்ளூர்க் கலைஞர்களின் ஆல்பம் பாடல்களின் கோர்வையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இளைஞர்கள் பலரும் அந்த பாடல்களைச் சேர்ந்து பாடியும், சிறுவர்கள் ஆடியும் கொண்டாடினர். ஆக தாப்பாவில் தேர்தலோடு சேர்ந்து, கச்சேரியும் கலை கட்டியது.

Leave a Reply