தாமான் டெங்கில் ஜெயா ஏரியில் முதலை; மக்களுக்கு எச்சரிக்கை

Malaysia, News

 295 total views,  1 views today

சிப்பாங்,டிச.7-

சிப்பாங், தாமான் டெங்கில் ஜெயாவுக்கு அருகில் உள்ள ஏரியில் 2 மீட்டர் நீளம் கொண்ட முதலை ஒன்று காணப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த ஏரிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.29 மணியளவில்  கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சைபர்ஜெயா தீயணைப்பு, மீட்புப் படையின்ர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் படை இயக்குனர் நோராஸம் காமிஸ் கூறினார்.
அருகேயுள்ள ஆற்றிலிருந்து வெளியேறிய முதலை ஏரியில் சிக்கிக் கொண்டதாக கருதுகிறோம். தீயணைப்பு வீரர்கள் முதலையை பிடிக்கவில்லை. மாறாக ஏரியில் யாரும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பை வைத்து சென்றுள்ளனர்.

Leave a Reply