தாமான் ஶ்ரீ மூடாவில் பெருவெள்ளம்; களத்தில் இறங்கினார் கணபதிராவ்

Malaysia, News

 193 total views,  1 views today

ஷா ஆலம்-

விடாது பெய்த அடைமழையின் காரணமாக இங்கு தாமான் ஶ்ரீ மூடா, செக்‌ஷன் 25 குடியிருப்புப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.  இப்பகுதயில் பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்த வேளையில் வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது.

அடைமழையை தொடர்ந்து ஆற்றின் நீர்மட்ட அளவு உயர்ந்ததை  தொடர்ந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதோடு சாலைகளில் புரண்டோடிய வெள்ளநீர் வாகனங்களையும் மூழ்கடித்தது.

இந்த சம்பவத்தை அறிந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் களத்தில் இறங்கினார்.

ஆற்றோரம் பெருக்கெடுத்த நீரோட்டத்தையும் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் பார்வையிட்ட கணபதிராவ்,   வெள்ளப்பெருக்கு நிலவரத்தை ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் ராய்டு, யுகராஜாவிடம் கேட்டறிந்தார்.

மேலும் இந்த வெள்ளப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வடிக்கால், நீர்பாசன இலாகாவும் ஷா ஆலம் மாநகர் மன்றமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

Leave a Reply