திசம்பர் 19 நாடாளுமன்றம் கூடுகிறது ! முக்கிய அங்கமாக நம்பிக்கை வாக்கெடுப்பு அரசு ஊழியர்களின் ஊதியம் ஆகிய விவகாரங்கள் !

Malaysia, News, Politics

 49 total views,  3 views today

குமரன் | 25-11-2022

நாட்டின் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 15வது நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் திசம்பர் 19 ஆம் நாள் கூடவிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் தாம் பிரதமர் பதவியேற்ற பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக பிரதமர் அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணியொடு தேசிய முன்னணி, ஜிபிஎஸ், வாரிசான், மூடா, பார்டி பங்சா மலேசியா உட்பட சுஉஏட்சை வேட்பாளர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதே நாடாளுமன்றக் கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும், புதிய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவோ அல்லது மறு ஆய்வு செய்து படைக்கப்படவோ கூடுதலாக ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply