திட்டமிடுங்கள்; இல்லையேல் பதவி விலகுக- கணபதிராவ் ஆவேசம்

Malaysia, News

 262 total views,  3 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,அக்.24-

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறுகளையும் குளங்களையும் முறையாக பராமரிக்காத வடிக்கால்,  நீர்பாசனத் துறை இலாகா அதிகாரிகளை சராமாரியான கேள்விகளால் குடைந்தெடுத்தார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்.

மழைக் காலங்களில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாமான்  ஸ்ரீ மூடா,  பத்து 8 உட்பட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலை எதிர்கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது.

மழை வெள்ளம் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று நீர் சுத்திகரிப்பு மையம், ஆற்றுப் பகுதிகளில் நேரடியாக களமிறங்கி சோதனை நடவடிக்கையில் களம் கண்டார் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ்.

இந்த சோதனை நடவடிக்கையில் பெரும்பாலான ஆறுகளும் குளங்களும் பராமரிக்கப்படாமல் ஏனோ தானோ போக்கை கடைபிடிக்கும் வடிக்கால், நீர்பாசனத் துறை இலாகாவின் அலட்சியத்தனமான பதில்களால் வெறுப்படைந்த கணபதிராவ்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆவேசம் அடைந்தார்.

வெள்ளம் ஏற்பட்டால் என்னோடு வாருங்கள்,  அப்போது தெரியும் மக்கள் எவ்வாறு தன்னை திட்டி தீர்க்கின்றனர் என்று.  உங்களின் பொறுப்பற்றத்தனத்தால் மக்களிடம் அவப்பெயரை நான் சம்பாதிக்கிறேன்.

ஆறுகளை பரமாரிக்காமல் சப்பை கட்டு கட்டுவதை விடுத்து களத்தில் இறங்கி பணியாற்றுங்கள். உங்களால் முறையான திட்டங்களை வகுத்து பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லையென்றால் பதிவி விலகி செல்லுங்கள் என்று தனது கோபத்தை வெளிபடுத்தினார்.

கணபதிராவின் இந்த ஆவேசமான பேச்சு அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

Leave a Reply