தித்திவங்சாவில் கடுமையானப் போட்டி நிலவுமா ? காலிட்டை களமிறக்குமா நம்பிக்கைக் கூட்டணி ?

Malaysia, News, Politics, Polls

 99 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 20/10/2022

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் கடுமையானப் போட்டி நிலவக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தொகுதியில் போட்டியிட தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி ஆகியவற்றில் இருந்து முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகிறது.

கடந்த முன்று தவணைகளாய் தமது கோட்டையாக விளங்கும் ஷா ஆலாமைத் தவிர்த்து இம்முறை தித்திவங்சாவில் தாம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறி இருக்கிறார் கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் காலிட் சமாட்

நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராரும் அமானா கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநருமான காலிட், முன்னாள் துணை நிதியமைச்சர் ஜோஹாரி கனி, பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அகமாட் ஃபாஷால் வான் அகமாட் கமால் ஆகியோருடன் போட்டியிடலாம்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்னோவின் உச்சமன்ற உறுப்பினருமான ஜோஹாரி, 2018 ஆம் ஆண்டு பெர்சத்துவைச் சேர்ந்த ரினா ஹாருனிடம் தோல்வியைத் தழிவினார்.

முன்னதாக, தித்திவங்சா தொகுதி பெர்சத்துவின் தலைவராக விளங்கும் வான் அகமாட் ஃபாஷால் இத்தொகுதியில் போட்டியிட எந்தவிதமான ஆட்சேபமும் தமக்கு இல்லை எனக் கூறி இருந்தார்.

தேசியக் கூட்டணியின் வேட்பாளராக, தித்திவங்சாவில் ரினா ஹருனுக்கு மாற்றாக வான் அகமாட் ஃபாஷாலும் சிப்பாங்கில் எஇனாவும்போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply