திறப்பதா? மூடுவதா?- தொழிலாளர் பற்றாக்குறையினால் தள்ளாடும் இந்திய வணிக நிறுவனங்கள்

Malaysia, News

 387 total views,  2 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

வணிக தலங்களை திறக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்த போதிலும் வேலைக்கு தொழிலாளர்கள் இன்றி பல இந்திய வணிக நிறுவன்ங்கள் திறக்கப்படுமா? மூடுவிழா காணப்படுமா? என்ற அச்சத்தை எதிர்கொண்டுள்ளன.

குறிப்பாக உணவங்கள், ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகைக்கடை,, முடிதிருத்தகம் போன்றவை தொழிலாளர் பற்றாக்குறையினால்  தொடர்ந்து செயல்பட முடியுமா? எனும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்கள் சம்மேளத்தின் தலைவர் ட்த்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக பல வணிக தலங்கள் மூடப்பட்டன. தற்போது கோவிட்-19 பாதிப்பு தணியத் தொடங்கியுள்ள நிலையில் பல இந்திய வர்த்தக நிறுவன்ங்கள் ஆள்பல பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதால் அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் காட்ட வேண்டும்.

உணவகங்கள், ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் பணிபுரிய உள்ளூர் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கோவிட் தொற்றினால் வேலை இழந்தவர்களை பணியில் அமர்த்துங்கள் என அரசாங்கம் கூறினாலும் இத்தகைய துறைகளில் பணியாற்ற உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை.

அடிப்படை வேலைகளுக்கு தொழிலாளர்கள் இல்லாமல் வணிக நிறுவன்ங்களை வழிநட்த்த முடியாத சூழலில் பிற வேலைகளில் உள்ளூர்வாசிகளை எவ்வாறு பணியமர்த்த முடியும்?

தங்களது வணிக நிறுவன்ங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவை என்று கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பயனாக 2018இல்  அப்போதைய பிரதமர் ட்த்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 30,000 அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க ஒப்புதல் வழங்கினார்.

ஆனால் 2018இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில்  30,000 அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் திட்டம்  தவிடுபொடியாகி போனதோடு தற்போதுவரை தொழிலாளர் பற்றாக்குறை பல இந்திய வணிக நிறுவன்ங்கள் எதிர்கொண்டு வருகின்றன என்று ட்த்தோ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வணிக நிறுவன்ங்கள் செயல்பட முடியாமல்  மூடுவிழா கண்டன. ஆனால் இப்போது வணிக நிறுவன்ங்கள் செயல்படலாம் என அரசாங்கம் அறிவித்தாலும்  போதிய ஆள்பலம் இல்லாமல் எங்கள் வணிகத்தை நாங்களே மூட வேண்டிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளோம் எனவும் அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் அரசாங்கம் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் இன்று மைக்கி ஹவுஸ்-இல் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் அவர் கூறினார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பிரிஸ்மா, பிரெஸ்மா, ஜவுளிக்கடை,, நகைக்கடை,, மளிகைக்கடை, முடிதிருத்தகம் ஆகிய வணிக நிறுவன சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடரும்….

Leave a Reply