தீபாவளிக்கு இரு நாட்கள் விடுமுறை- சர்ச்சையாக மாறிய சைட் சித்திக் கோரிக்கை

Malaysia, News, Politics

 88 total views,  1 views today

கோலாலம்பூர்-

தீபாவளிக்கு இரு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த மூடா கட்சியின் தலைவர் சைட் சித்திக்கின் கருத்து சர்ச்சையாக மாறியுள்ளது.

பொது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப ‘மலேசிய குடும்ப’ அரசாங்கம் இரு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று சைட் சித்திக் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் 2018 முதல் 2020 வரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சைட் சித்திக் இவ்விவகாரம் குறித்து ஏன் அப்போதே பேசவில்லை? கேள்விகள் எழுகின்றன.

தீபாவளிக்கு இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட  வேண்டும் என்ற கோரிக்கை பல வருடமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல அரசாங்கங்கள் மாறியும் இந்த கோரிக்கைக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை.

விளம்பரம்

Leave a Reply