தீபாவளிக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்குக- டத்தோஸ்ரீ சரவணன்

Malaysia, News

 319 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.31-
நவ.4ஆம் தேதி தீபாவளி பெருநாளை முன்னிட்டு வியாழன்,வெள்ளி ஆகியவை பொது விடுமுறையாக அனுசரிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.


தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறையாக அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு ஒரு நாள் பதிவில் இல்லாத விடுமுறை வழங்கிய அரசாங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன்.

தீபாவளி மறுநாளும் பொது விடுமுறையாகக் கருதப்படும் இந்தக் கூடுதல் விடுமுறை 2018 முதல் அமலில் இருந்து வருகிறது.


தனியார் நிறுவனங்களும் இதைக் கவனத்தில் கொண்டு, அவர்களும் தங்கள் பணியாளர்களுக்குக் கூடுதல் பொது விடுமுறையாக வெள்ளிக்கிழமை விடுப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
குறிப்பாக தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும்.


இந்த வருடம் தீபாவளிப் பெருநாள் வியாழக்கிழமை வருவதால், வெள்ளிக்கிழமை இந்த கூடுதல் விடுமுறை என்பது தொடர்ந்து வார இறுதி வரை குடும்பத்தார், உற்றார் உறவினர்களோடு கொண்டாடி மகிழ ஒரு ஏற்ற தருணமாக அமையும்.

மேலும் கடந்த வருடம் கொரோனா தொற்றால் உறவுகள், நண்பர்களோடு ஒன்றாகக் கொண்டாட முடியாத சூழலில் இந்த முறை நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


எனவே தனியார் நிறுவனங்கள், அதன் முதலாளிகள் இந்த விடுமுறையைச் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

Leave a Reply