தீபாவளி கோலத்தை அலங்கோலப்படுத்திய இருவர் கைது

Malaysia, News, Politics

 215 total views,  1 views today

கிள்ளான் –

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மருத்துவமனை ஒன்றில் போடப்பட்டிருந்த தீபாவளி கோலத்தை மிதித்து அலங்கோலப்படுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலத்தை மிதித்து அலங்கோலப்படுத்தியவரும் அதனை வீடியோ எடுத்தவரும் கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு காவல்துறை துணை ஆணையர் எஸ்.விஜயராவ் தெரிவித்தார்.

அவ்விரு நபர்களும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பணியாளர்கள் ஆவர் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply