துணைப் பிரதமர் இல்லாத 2ஆவது புதிய அமைச்சரவை

Uncategorized

 334 total views,  1 views today

கோலாலம்பூர்-

துணை பிரதமர் இல்லாத புதிய அமைச்சரவையை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்தார்.

தொலைக்காட்சி நேரலை வழி தமது புதிய அமைச்சரவையை அவர் அறிவித்தார்.

அதில் அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சராக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, தற்காப்பு அமைச்சராக டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன், சுகாதார அமைச்சராக கைரி ஜமாலுடின், நிதியமைச்சராக தெங்கு ஸப்ரூல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது பழைய இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
கூட்டரசு பிரதேச துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா தற்போது சுற்றுலா துறை துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பேராக் மாநில முன்னாள் மந்திரி பெசாரும் முன்னாள் பிரதமரின் ஆலோசகருமான டத்தோஸ்ரீ ஃபைசால் அஸுமு இளைஞர், விளையாட்டு அமைச்சராக நியமிக்கபட்டுள்ளார்.

மேலும் டத்தோ மா ஹாங் சூன் கல்வி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் வரும் திங்கட்கிழமை 30ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்தானா நெகாராவில் பதவி உறுதிமொழி எடுக்கவுள்ளனர் என்று பிரதமர் அறிவித்தார்.

Leave a Reply