துன் சம்பந்தன் வரலாற்றை மழுங்கடிப்பதா? நாகலிங்கம் ஆவேசம்

Malaysia, News, Politics

 253 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

5ஆம் ஆண்டுக்கான வரலாற்றுப் பாட புத்தகத்தில் துன் வீ.தி.சம்பந்தனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும்  வகையில் துன் சம்பந்தனின் பெயர் பயன்படுத்தப்பட்டு இஇசி துரைசிங்கத்தின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்று சுங்கை சிப்புட் சமூக ஆர்வலர் நாகலிங்கம் வலியுறுத்தினார்.

மலேசியாவின் வரலாற்றில் துன் சம்பந்தனின் பெயர்  மறக்கடிக்கக்கூடியதல்ல. நாட்டின் சுதந்திரத்தில் கையெழுத்திட்ட தலைவர்களின் துன் சம்பந்தனும் ஒருவர். அவரின் வரலாற்றை இன்றைய மாணவர் சமுதாயம் அறிந்து  வைத்திருப்பது அவசியமாகும்.

மாணவர்களுக்கான கல்வி பாடப் புத்தகம் அவர்களின் அறிவுஜீவியாகும். அதிலேயே துன் சம்பந்தனின் பெயர் பதித்து அவருக்கு பதிலாக வெறொருவரின் புகைப்பட த்தை பதிவிடுவது மாணவர்கள்  நாட்டி ன் வரலாற்றை தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.

இவ்விவகாரம் தொடர்பில் துன் சம்பந்தனின் புதல்வி தேவகுஞ்சரி விடுத்திருக்கும் கண்டனத்தை ஆதரிப்பதாக கூறிய நாகலிங்கம், தவறான தகவலை பதிவிட்டுள்ள இந்நூலை கல்வி அமைச்சு மீட்டு சரியான தகவல்கள் இடம்பெற்றுள்ள  புதிய பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் நாகலிங்கம் கூறினார்.

Leave a Reply