உக்ரேனில் தேச துரோகம் செய்த 2 அதிகாரிகள் பதவி நீக்கம் (Video News)

News, World

 253 total views,  1 views today

குரல்: டாஷினி இந்திர பத்மன்

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று படையெடுப்பு தொடங்கிது. அன்று முதல் தற்போது வரை ரஷிய படைகள் குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களின் போது 153 குழந்தைகளைக் கொன்றது. மேலும், 245 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், தேச துரோகம் செய்த 2 மூத்த அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply