துரோகிகளுக்கு பாடம் புகட்டுங்கள்- கணபதிராவ்

Malaysia, News, Politics

 693 total views,  1 views today

ஜோகூர்பாரு-

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் வாக்குகளின் மூலம் புதிய அத்தியாயத்தை படைத்த மலேசியர்களின் கனவை சிதறடித்த துரோகிகளின் சதிநாச வேலையை ஜோகூர் வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

2018இல் மக்களின் அமோக ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி. 22 மாதங்கள் மட்டுமே ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை சில சுயநலவாதிகள் சந்தர்ப்பவாதத்தால் கவிழ்த்தனர்.

சுயநலவாதிகளின் துரோகச் செயலால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கவிழ்த்தவர்கள் இன்று எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் ஜோகூர் மாநில தேர்தலை எதிர்கொள்ள அதே மக்களிடமே உலா வருகின்றனர்.

நம்பிக்கை துரோகம் செய்து மக்களின் கனவை சிதைத்த துரோகிகளுக்கு ஜோகூர் மாநில தேர்தலில் தக்க பாடம் புகட்ட ஜோகூர் வாக்காளர்கள் தயாராக வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.

Leave a Reply