தூக்கத்தை தொலைத்த ஶ்ரீ மூடா மக்கள்

Malaysia, News

 323 total views,  1 views today

ஷா ஆலம்-

மீண்டுமொரு வெள்ளப் பேரிடர் நிகழ்ந்திடுமோ எனும் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்த பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர் ஷா ஆலம், தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்கள்.


இன்று மாலை கோலாலம்பூரை திணறடித்த கடுமையான மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் ஶ்ரீ மூடாவிலும் எதிரொலிக்கலாம் எனும் அச்சத்தின் காரணமாக ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் நீர் சுத்திரிகரிப்பு நிலையத்தின் முன் திரண்டுள்ளனர்.


சம்பவ இடத்தில் களமிறங்கியுள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ், நிலைமையை கண்டறிந்ததோடு ஆற்றை முறையாக பராமரிக்க தவறும் ஜேபிஎஸ் இலாகாவின் நடவடிக்கையை சாடியுள்ளார்.

வெள்ளப் பேரிடரை தவிர்க்க ஆற்றை தூர் வாரி உரிய மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் மானியம் ஒதுக்கியுள்ள போதிலும் சம்பந்தப்பட்ட இலாகா காட்டும் அலட்சியப் போக்கினால் ஶ்ரீ மூடா மக்கள் இன்று தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர் என்று ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

Leave a Reply