தெலுக் இந்தானை மஇகா வெல்லும் வாய்ப்பு பிரகாசம்- ஆய்வாளர்

Malaysia, News, Politics

 79 total views,  1 views today

கோலாலம்பூர்-

கேமரன் மலை தொகுதிக்கு பதிலாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடுவது மஇகாவுக்கு பாதுகாப்பான அரசியல் வியூகமாக கருதப்படுகிறது. அதே வேளையில் ஜோகூர், மலாக்கா  மாநில தேர்தல்களில் கையாண்ட விவேகமான பிரச்சார அணுகுமுறைகளை கையாள்வதன் மூலம் மஇகா அத்தொகுதியில் தனது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஜி.மணிமாறன் தெரிவித்தார்.

சரியான வியூகங்கள் வகுக்கப்பட்டால் போட்டி கடுமையாக இருந்தாலும் மஇகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த 2019 முதல் மஇகாவின் உதவித் தலைவரான டத்தோ டி.முருகையா தெலுக் இந்தான் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Reply