தேசிய மீட்பு மன்றத்தின் தலைவராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் நியமனம்

Uncategorized

 146 total views,  3 views today

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தேசிய மீட்பு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று நாட்டின் தலைமைச் செயலாளர் முகமட் ஸூக்கி அலி தெரிவித்தார்.
செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அந்தஸ்து உள்ள இந்த பதவிக்கு நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் குறித்து மாமன்னருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தினால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மீட்டெடுப்பதற்கு டான்ஶ்ரீ முஹிடினின் திறமை மீது அரசாங்கம் நம்பிக்கைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக்கொண்டதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ முஹிடின் யாசின் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply