தேசிய முன்னணியில் இணையும் உறுப்புக் கட்சிகள் : நாளை இரவு முடிவு செய்யப்படும் ! – மாட் ஹாசான்

News, Politics, World

 85 total views,  2 views today

கோலாலம்பூர் – 14 ஆகஸ்டு 2022

Parti Bangsa Malaysia (PBM) உட்பட தேசிய முன்னணியில் இணையக் கூடிய கட்சிகள் குறித்து நாளை நடக்கவிருக்கும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதன் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகம்மட் ஹசான் சொன்னார்.

எந்தெந்தக் கட்சிகள் என்கின்ற விவரம் குறித்து எந்தவிதமான தகவலையும் அவர் வெளியிட மறுத்து விட்டார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தின் நடந்த தேசிய முன்னணி மகளிர் மாநாட்டை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பின்னர் இவ்வாறு சொன்னார்.

தேசிய முன்னணி உச்சமன்ற சந்திப்புக் கூட்டம் நாளை இரவு புத்ரா உலக வாணிப மையத்தில் நடக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தேசிய முன்னணியில் இணைய பிபிஎம் கட்சியின் தலைவர் ஸுரைடா கமாருடின் விண்ணப்பித்து இருந்தார்.

மக்களுக்குப் பிடித்த வேட்பாளர் எனும் வியூகத்தை இம்முறை 15வது பொதுத் தேர்தலில் பயன்படுத்த இருப்பதாக தமதுரையில் முகம்மட் ஹசான் சொன்னார்.

எனவே, முன்கூட்டியே வேட்பாளர்களின் பட்டியல் வேண்டும் எனக் கூறிய அவர் மக்களுக்குப் பிடித்த வேட்பாளரை நாம் களம் இறக்க வேண்டுமே அன்றி தொகுதித் தலைவர்களுக்குப் பிடித்த வேட்பாளர்களை அல்ல என்றார் மாட் ஹசான்.

இந்த வியூகத்தால் பல புதிய முகங்கள் களமிறக்கப்படுவார்களா என அவரிடம் வினவியபோது சூழ்நிலைகளைப் பொருத்தது என்றார்.

பழைய முகங்களுக்கு இன்னும் ஆதரவு வலுவாக இருந்தால் அவர்கள் நிலை நிறுத்தப்படுவார்கள் எனவும் மாட் ஹசான் குறிப்பிட்டார்.

Leave a Reply