தேசிய முன்னணியில் 70% புதிய முகங்கள் ! – ஸாஹிட் ஹமிடி

Malaysia, News, Politics, Polls

 116 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 16/10/2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி களமிறங்க உள்ள நிலையில் அக்கட்சியின் கீழ் போட்டியிட இருக்கிறவர்களில் 70% புதிய முகங்களாக இருப்பார்கள் என தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறி இருக்கிறார்.

கல்வித் தகுதி, மக்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை ஆகியன கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவதாகக் கூறினார்.

அதே சமயம், மகளிர் வேட்பாளர்கள் 30 விழுக்காட்டினருக்கும் வாய்ப்பு தர பணிகள் நடந்து வருவதாகவும் பாகான் நடத்தோ நடாளுமன்றத் தொகுதி அம்னோ தலைவருமான அவர் சொன்னார்.

அந்த முடிவு மிகவும் கடினமானதாக இருந்தாலும், மக்களின் தேவையை நிறைவு செய்யவும் தேசிய முன்னணியில் புத்தாக்க மாற்றத்தை மக்களுக்குக் காட்டவும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

தேசிய முன்னணியின் தலைவராகவும் அம்னோ கட்சியின் தலைவராகவும் தாம் நியாயமாக நடக்க வேண்டும் எனக் கூறிய ஹமிடி, பழைய முகங்கள் – புதிய முகங்கள் இரண்டு தரப்பினரையும் தாம் சமநிலையாகவும் சரியாகவும் கையாள வேண்டும் என்றார்.

இருந்தாலும், வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை என ஸாஹிட் குறிப்பிட்டார்

Leave a Reply