ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் கலை கட்டியது பெரா மாநாட்டு மண்டபம் !

Malaysia, News, Politics, Polls

 18 total views,  1 views today

– குமரன் –

பெரா – 5/11/2022

வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் இங்குள்ள தேர்தல் வேட்பாளர் பதிவு மையத்தின் முன்புறம் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி ஆகிய கூட்டணிகளின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் குறை ஏதும் இல்லாமல் இருந்தது.

தங்களின் கட்சி – வேட்பாளர் பெயரைக் குறிப்பிட்டு உற்சாகக் கூச்சல் மிகுதியாகவே இருந்தது.

பெரா நாடாளூமன்றத் தொகுதியைத் தக்க வைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 15வது பொதுத் தேர்தலில்ம்  போட்டியிட தேசிய முன்னணியின் வேட்பாளராக தமது வேட்பாளர் பாரத்தை காலை 9.22 மணி அளவில் சமர்ப்பித்தார்.

அதே தொகுதியில் போட்டியிடும் நபிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த அபாஸ் அவாங்கை முன்மொழிய நோரஸ்லான் ஸயினும் ரஹ்மாட் ஸைனுடினும் காலை 9.00 மணிக்கு வந்தடைந்தனர்.

தேசியக் கூட்டணியின் அஸ்மாவி ஹாருன் போட்டியிடுவதை முன்மொழிய முகம்மட் தமிட் மாட் ஸின்னும் முகம்மட் நயில் அப்துல் கனியும் வந்து தங்களின் வேட்பாளர் பாரத்தை வழங்கினர்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் பெரா தொகுதியில் போட்டியிட்ட இஸ்மாயில் சப்ரி 20,760 வாக்குகள் பெற்று பிகேஆர்-இன் ஸக்காரிய அப்துல் ஹமிட்டையும் (18,449 வாக்குகள்) பாஸ் கட்சியின் வேட்பாளரையும் (8,096) தோற்கடித்தார்.

இம்முறை பெரா நாடாளுமன்றத் தொகுதியில் 19,338 புதிய வாக்காளர்கள் பதியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply