தேமுவில் MMSP- முந்தைய கருத்தை பொய்யாக்கியுள்ளது டான்ஶ்ரீ விக்கியின் கூற்று- தனேந்திரன்

Malaysia, News, Politics

 406 total views,  1 views today

கோலாலம்பூர்-

தேசிய முன்னணி கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால போராட்டம் . அதற்கு தேமுவில் பங்காளி கட்சியாக உள்ள மஇகா  ஒருபோதும் தடையாக இருக்காது என்ற அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் கூற்றை வரவேற்பதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் ட்த்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்.

தேமுவில் இதர இந்திய கட்சிகள் இணைவதற்கு மஇகா தடையாக இருந்து வருகிறது என்ற கருத்தை டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கூற்று பொய்யாக்கி உள்ளது.

 மஇகாவுக்கு நாம் எப்போதுமே ஆதரவாக இருப்போம். அதேபோல் மஇகாவும் நமக்கு ஆதரவுக்கரமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. அனைத்துமே சரிசமமான சூழலிலே உள்ளது. மக்கள்தான் அனைத்து தீர்மானிப்பவர்கள்.

எனவே தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திலும்  டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இதே நிலைபாட்டில் உறுதியாக இருப்பார் என்று நம்பிக்கைக் கொள்வதாக டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

Leave a Reply