தேமுவுக்கு ஆதரவு அலை -வீரன்

Malaysia, News, Politics

 148 total views,  1 views today


ரா.தங்கமணி
அலோர்காஜா-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவான அலை வீசுவதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மூ.வீரன் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனல், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள போதிலும் தேசிய முன்னணிக்கு மக்களின் ஆதரவு வலுத்து வருகிறது.


கடந்த பொதுத் தேர்தலில் மாற்றத்தை விரும்பி கடைசியில் ஏமாற்றமே மிஞ்சிய விரக்தியில் உள்ள மக்கள் இம்முறை தேசிய முன்னணிக்கே தங்களது ஆதரவை வழங்க முன்வருகின்றனர்.


அதே போன்று மஇகா வேட்பாளர் களமிறங்கும் காடேக் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இம்முறை காடேக் தொகுதியில் வெற்றி நிலைநாட்ட மஇகா கடுமையாக பாடுபடுகிறது என்று பேரா, தைப்பிங் தொகுதி மஇகா தலைவருமான வீரன் குறிப்பிட்டார்.

Leave a Reply