தேமுவுக்கு இந்திய வாக்குகள் வேண்டாம் என லோக்மான் அறிவிக்க முடியுமா! ?

Malaysia, News, Politics

 278 total views,  1 views today

ஜொகூர் பாரு-

நாட்டில் எந்த ஒரு தொகுதியிலும் இந்தியர்கள் பெரும்பான்மை இல்லை எனவே இந்திய தலைவர்கள் குறிப்பாக (மஇகா தலைவர்கள்)அலட்டி கொள்ள வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு காணொளி வழியாக அம்னோவின் மத்திய செயலவை உறுப்பினர்டத்தோ லோக்மான் அடாம் பேசி இருப்பது கண்டனத்திற்க் குறியது என ஜொகூர் ஜசெக சந்திரசேகரன் சாடியுள்ளார்.

லோக்மான் அவருடைய அந்த பதிவில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை தொட்டு பேசி இருப்பது ஏற்க முடியாது எனவும், அது தான் உண்மை எனவும் கூறியிருக்கும் திரு லோக்மான் ஒரு அரசியல் குருடன்.

எதிர்வரும் 15-வது பொதுதேர்தலில் இந்தியர்கள் சிறுபான்மையாக இருப்பதால் அவர்களின் வாக்குகள் அம்னோவுக்கு வேண்டாம் என அறிவிக்க முடியுமா என டத்தோ லோக்மான் பாபாவுக்கு சந்திரசேகரன் ஆறுமுகம் கேள்வி விடுத்துள்ளர்.

கடந்த 14வது தேர்தலில் அடைந்த பின்னடைவை சற்று நினைவு கொள்ள வேண்டும். மேலும், இந்த நாட்டில் இந்திய வாக்காளர்கள் வெறும் 7.8 சதவிதம், அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் 62 நாடாளுமன்ற தொகுதிகளிளும்,110 சட்டமன்ற தொகுதிகளிளும் தேசிய முன்னணியாக இருத்தாலும் சரி அல்லது நம்பிக்கை கூட்டணியாக இருத்தாலும் அதன் வெற்றியை உறுதி செய்வது இந்த சிறுபான்மை இந்திய வாக்காளர்கள் என்பது நினைவில் கொள்ள திரு லோக்மான் தவற விட்டு விட்டார் எனவே அவர் முதலில் உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என ஜொகூர் ஜசெக தலைவர்களின் ஒருவரான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply