தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்- டத்தோ முருகையா

Malaysia, News, Politics

 189 total views,  1 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 3உல் 2 பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் மஇகா 4 தொகுதிகளில் போட்டியிடும் வேளையில் இத்தொகுதிகளில் தேமுவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தேசிய முன்னணி மீண்டும் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய வாக்காளர்கள் தங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தங்களது வாக்கு பலத்தை புலப்படுத்த வேண்டும்.

தேசிய முன்னணியால் சிறந்த ஆட்சியை வழங்க முடியும் என்பதை கடந்த கால கசப்பான சம்பவங்கள் புலப்படுத்தியுள்ளன. ஆகவே நன்கு சிந்தித்து வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கான தமது ஆதரவை வழங்க வேண்டும் என்று டத்தோ முருகையா சொன்னார்.

Leave a Reply