தேமுவுடனே எங்களது கூட்டணீ-மசீச

Malaysia, News, Politics

 308 total views,  1 views today

கோலாலம்பூர்-

மசீசவுக்காக அம்னோ செய்துள்ள தியாகங்களை மறக்கவில்லை. இன்னமும் தேசிய முன்னணியுடன்தான் எங்களின் கூட்டணியே என்று மசீச தலைவர் வீ கா சியோங் தெரிவித்தார்.
கடந்த 2019இல் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மசீச வேட்பாளருக்காக அம்னோ பிரச்சாரம் செய்தது, மசீசவுக்காக அம்னோ செய்துள்ள தியாகங்கள் எதனையும் மறக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மசீசவின் பொதுக் கூட்டத்தில் மசீச தேசிய முன்னணியுடனே நீடிக்கும். தேமு இடம்பெற்றுள்ள அம்னோ, மஇகா போன்று மசீசவும் ஓர் உறுப்புக் கட்சியே.
பெரிக்காத்தான் நேஷனல் அரசை ஆதரிக்கும் கடந்த தேசிய முன்னணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் மசீச உறுதியாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
அம்னோ செய்துள்ள தியாகங்களை மசீச மறந்து விடக்கூடாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியிருந்தார்.

Leave a Reply