
தேமு ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
537 total views, 1 views today
கோலாலம்பூர்-
தேசிய முன்னணி வலுவான ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். அக்கூட்டணியின் தேசிய, மாநில தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகள் ஒருவருக்கொருவர் மாறுபட்டதாக இருக்கக்கூடாது. இதுபோன்ற அறிக்கைகள் தலைமைத்துவத்தில் பிளவு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் இவ்வேளையில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் உட்பூசல்கள் அதன் உறுப்பினர்களுக்கும் வாக்காளர்களுக்கும் மாறுபட்ட அறிகுறியை அல்லது தலைமைத்திவத்தில் கருத்து வேறுபாடு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.
மலாக்கா, ஜோகூர் மாநில தேர்தல்களின்போது நிலைத்தன்மைக்காக வழங்கிய வாக்குறுதிகளை நாம் மீண்டும் நினைத்து பார்க்க வேண்டுமென தேமுவின் 48ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.