தேமு, ஜிபிஎஸ் கட்சிகளில் இருந்து துணைப் பிரதமரா ?

Uncategorized

 18 total views,  6 views today

குமரன் | 24-11-2022

டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் பதவியேற்ற பிறகு தாம் அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் 2 துணைப் பிரதமர்கள் இருக்கக் கூடும் எனவும் அவர்கள் தேசிய முன்னணி, ஜிபிஎஸ் கட்சிகளில் இருந்து நியமிக்கப்படக் கூடும் என்பது போல் தமதுரையில் குறிப்பிட்டார்.

தாம் தலைமை வகிக்கின்ற ஒற்றுமை அரசாங்கத்தில் அவ்விரு கட்சிகளூம் முதன்மை பங்கு வகிப்பதாக அவர் பிரதமர் பதவியேற்ற பிறகு அவர் பேசிய முதல் செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.

“இஃது ஒற்றுமை அரசாங்கம் விவகாரமாகும், எனவே இது குறித்து கலந்தாலோசிக்க கால அவகாசம் வேண்டும்.”

வழக்கமாக துணைப் பிரதமர் பதவி வேறு கூட்டணியில் இருந்து (நம்பிக்கைக் கூட்டணியைத் தவிர்த்து) தேர்ந்தெடுக்கப்படும். இது வரையில் அது தேசிய முன்னணியாக இருக்கின்றது என்றார் அவர்.

சபா, சரவாக் மாநிலங்களைப் பொறுத்த வரையில் அங்கு மிகவும் வலுவான கட்சியான ஜிபிஎஸ்-க்கு வழங்கப்படலாம்.

பிரதமராக நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து பதவி வகிக்கும்போது துணைப் பிரதமர் பதவி இதரக் கூட்டணிக்கு வழங்கப்படும்.

தாம் தலைமை வகிக்க இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் முதன்மைக் கட்சிகளாக நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி, ஜிபிஎஸ் ஆகியன இருக்கின்ற நிலையில் வாரிசான், பார்டி பங்சா மலேசியா, மூடா கட்சிகளும் இடம்பெறும் என அன்வார் சொன்னார்.

மேலும், தாம் பிரதமர் பதவிக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனும் அவரது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் சொன்னார்.

நிலையில்லாதப் பொருளாதாரச் சூழலில் மக்களில் நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வரும் வகையில் இந்த முடிவு மிகவும் முக்கியம் என அவர் மேலும் கூறினார்.

கடந்த நவம்பர் 15 ஆம் நாள் 15வது பொதுத் தேர்தல் பரப்புரை காலத்தில், தாம் பிரதமரானால், அதன் ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விலைவாசியால் மக்கள் அவதியுறுவது தமக்கு முகிந்த வேதனையைத் தருவதாகவும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுப்படாத நிலையில் தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கினார்.

Leave a Reply