தேமு + பிஎச் + பிஎன்= தொடங்கியது பலபரீட்சை

Malaysia, News, Politics

 165 total views,  1 views today

அலோர்காஜா,நவ.9-

நாட்டை ஆண்ட/ ஆண்டு கொண்டிருக்கும் மூன்று முதன்மை கூட்டணி கட்சிகளின் பலபரீட்சை களமாக மலாக்கா மாநில தேர்தல் அமைந்துள்ளது.

வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கூட்டணி கட்சிகளில் 28 சட்டமன்றத் தொகுதியிலும் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

இதை தவிர்த்து புத்ரா, இமான், சுயேட்சை வேட்பாளர்கள் என மும்முனை போட்டி முதல் ஆறு முனைப் போட்டிகள் சில தொகுதிகளில் நிலவுகின்றன.

இந்த தேர்தல் தேமு, பிஎச், பிஎன் ஆகிய மூன்று முதன்மை கூட்டணி கட்சிகளுக்கான பலப்பரீட்சையாக அமைந்துள்ள நிலையில் வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான ஆயுத்த களமாகவும் மலாக்கா மாநில தேர்தல் அமைந்துள்ளது.

Leave a Reply