தேமு மட்டுமே மக்களுக்கான மேம்பாட்டை கொண்டு வர முடியும்

Malaysia, News, Politics

 313 total views,  3 views today

ஜொகூர்பாரு-

தேசிய முன்னணி அரசாங்கத்தால் மட்டுமே மக்களின் சிறந்த மேம்பாடுகளை கொண்டு வர முடியும் என்பதால் ஜோகூர் மாநில மக்கள் தங்களின் எதிர்கால நலன் கருதி நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

தேசிய முன்னணி சார்பில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். மஇகா வேட்பாளர்கள் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், மஇகா வேட்பாளர்கள் போட்டியிடும் புக்கிட் பத்து, கஹாங், தெங்காரோ, கெமெலா ஆகிய தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதோடு, ஜொகூர் மாநில அம்னோ, மசீச தலைவர்களை சந்திந்து நடப்பு நிலவரங்கள் குறித்து விவாதித்தார்.
கஹாங் தொகுதியில் ஆர்.வித்தியானந்தன், தெங்காரோ தொகுதியில் ரவீன்குமார் கிருஷ்ணசாமி, புக்கிட் பத்து தொகுதியில் எஸ்.சுப்பையா, கெமெலா தொகுதியில் சரஸ்வதி நல்லதம்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply