தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறதா மஇகா ?

Malaysia, News, Politics, Polls

 235 total views,  1 views today

இரா. தங்கமணி

கோலாலம்பூர் – 1/11/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்க மஇகா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

தொகுதி பங்கீடு தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படாத நிலையில் மஇகா இம்முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

இன்று தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இத்தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவு மஇகா தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply