‘தேர்தலில் மமச கட்சி’; விசுவாசத்திற்கு கிடைத்தவை- சீண்ட வேண்டாம்- தாஸ் அந்தோணிசாமி

Malaysia, News, Politics

 490 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சி போட்டியிட தொகுதிகள் வழங்கப்படும் என்ற தேமுவின் முடிவு எங்களின் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு. அதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்று அக்கட்சியின் பேரா மாநில துணைத் தலைவர் தாஸ் அந்தோணிசாமி குறிப்பிட்டார்.


கடந்த 13 ஆண்டுகளாக தேசிய முன்னணியின் தோழமைக் கட்சியாக இருந்து பொதுத் தேர்தல். இடைத் தேர்தல் என எல்லா காலங்களிலும் தேமுவின் வெற்றிக்காக மலேசிய மக்கள் சக்தி பெரும்பாடு பட்டுள்ளது. அதன் விளைவாகவே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேமு தங்களுக்கு வழங்கியுள்ளது என்பதை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


விசுவாசம் என்ன என்பதை எங்களுக்கு போதிக்க வேண்டாம். கூட்டணிக்கும் வாக்காளர்களுக்கும் விசுவாசம் இல்லாதவர்களால் நம்பிக்கை துரோகத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பதை முதலில் நீங்கள் உணருங்கள். துரோகிகளை உடன் வைத்து கொண்ட உங்களை விட விசுவாசத்திற்காக இன்னமும் ஒரே கூட்டணியை ஆதரிக்கும் நாங்கள் மேலானவர்கள் தான்.

அதோடு, இந்திய சமுதாயத்தின் ஆதரவு மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்காது என கூறும் உங்களால் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் ஆதரவும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? 22 மாத கால ஆட்சியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது இந்தியர்களை அடைந்துள்ள வெறுப்பைதான் மறைக்க முடியுமா?


கடந்த 13ஆண்டுகளாக மலேசிய மக்கள் சக்தி கட்சி செய்துள்ள சேவைகளை மக்கள் நன்கு அறிவர். 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பல கட்சிகள் தேமுவை விட்டு விலகிய போதிலும் மலேசிய மக்கள் சக்தி கட்சி இன்னமும் அக்கூட்டணிக்கான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது. தமது தலைமைத்துவத்தில் இந்தியர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இன்னமும் நன்றி மறவாமல் இன்னமும் தனக்கான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார் இக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்.


விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே தேர்தலில் போட்யிடும் வாய்ப்பை பெற்றுள்ள மலேசிய மக்கள் சக்தி இந்திய சமுதாயத்தின் மேன்மைக்காக தொடர்ந்து போராடும். அதை விடுத்து தேர்தல் களத்தில் சந்திப்பதற்கு முன்னரே தங்களை கண்டு அஞ்ச வேண்டாம் சுங்கை சிப்புட் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான தாஸ் அந்தோணிசாமி குறிப்பிட்டார்.

Leave a Reply