தேர்தலில் வெற்றி பெற்றால் நான் பிரதமரா ? – மறுக்கிறார் ஸாஹிட் ஹமிடி

Malaysia, News, Politics, Polls

 165 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 16/10/2022

15வது பொதுத் தேர்தலில் அம்னோ / தேசிய முன்னணி வெற்றி பெற்றால் இஸ்மாயில் சப்ரியே பிரதமராக முன்மொழியப்படுவார். எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல், தாம் பிரதமராகப்போவதில்லை என தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹுட் ஹமிடி கூறினார்.

இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

எப்படி இருந்தாலும், பிரதமரை நியமிப்பது மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது

ஒரு வேளை, இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைத் தவிர்த்து வேறு யாருடைய பெயர் கூறப்பட்டாலும் அது அம்னோ – தேசிய முன்னணியைப் பிளவு படுத்தும் எதிர்க்கட்சியின் செயல்பாடாகும் எனவும்ம் ஸாஹிட் சொனார்.

Leave a Reply