தேர்தலை நோக்கி : பினாங்கு மாநில ம.இ.கா. தொகுதிகளின் மகளிர் தலைவிகளுக்கு சிறப்பு பயிற்சிப் பட்டறை!

Malaysia, News, Politics

 516 total views,  1 views today

ஜோர்ஜ் டவுன் – 4 ஏப்பிரல் 2022

பினாங்கு மாநில ம.இ.கா. தொகுதிகளின் மகளிர் பிரிவு தலைவிகளுக்கு தேர்தலை நோக்கி சிறப்புப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

தலைமைத்துவம், தொகுதி நிர்வகிப்பு, மக்கள் பிரச்சனைகளைக் கையாளும் யுக்திமுறைகள், வாக்காளர் கணக்கெடுப்பு எனப் பலதரப்பட்ட விவகாரங்கள் இந்தப் பட்டறையின் அங்கமாகத் திகழ்ந்தன.

இதில் பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவு பொறுப்பாளர்கள், சிறப்புப் பிரிவு பொறுப்பாளர்கள், தொகுதி நிலையிலான மகளிர் பிரிவு தலைவிகள் அனைவரும் கலந்து கொண்டதாக பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவு தலைவி கவிதா சிவசாமி தெரிவித்தார்.

செபெராங் பிறைக்கும் பினாங்குத் தீவுக்கும் இரு பிரிவுகளாக அடுத்தடுத்து நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையை அம்னோ மகளிர் பிரிவின் தேசியத் துணைத்தலைவரும் பினாங்கு மாநில அம்னோ மகளிர் பிரிவின் தலைவியுமான டத்தோ நோர்லிஸா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

செபெராங் பிறையில் நடந்தப் பயிற்சிப் பட்டறையை ம.இ.கா. பினாங்கு மாநில தகவல் பிரிவுத் தலைவர் தினகரன் தொடக்கி வைத்தார்.

தேர்தல் பரபரப்பை இப்போதே மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். 15வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான ஆயத்தப்பணிகள் மேலும் மேம்படுத்த இந்தப் பயிற்சிப் பட்டறை உதவும் எனத் தாம் நம்புவதாக கவிதா குறிப்பிட்டார்.

பயிற்சியின் இறுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களின் மனநிலையையும் கள நிலவரத்தையும் கண்டறியும் வாய்ப்பையும் வழங்கியது அதில் கலந்து கொண்டவர்களுக்கு மேலும் ஊக்கமளித்திருக்கும் எனவும் அவர் சொன்னார்.

Leave a Reply