தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் பங்களிக்க வேண்டும்

Malaysia, News

 390 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் மாமன்னருடன் இணைந்து மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் செயலாற்ற வேண்டும் என்று பேரா மாநில சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா வலியுறுத்தினார்.
சுதந்திரமான, நியாயமான தேர்தலின் வழி மக்களின் நம்பிக்கையையும் பங்களிப்பையும் மேம்படுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்குமான மனித உரிமைகள் கடைபிடிப்பதற்கான அனைத்துலக தரநிலையும் செயல்படுத்தப்பட வேண்டும்.

மக்களின் பாதுபாப்புக்கும் நீதியை பெறுவதற்கான இடமாகவும் மலாய் ஆட்சியாளர்களின் மன்றம் ஒரு மைய புள்ளியாக பழங்காலத்திலிருந்தே பாரம்பரியமாக இருந்து வருகிறது.
மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் என்பது நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கும் பல்வேறு விஷயங்களில் சமநிலை பங்கை முழுமை செய்வதற்கும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட மன்றமாகும்.
மற்றவர்களின் குரல்களுக்கும் வேண்டுகோள்களுக்கும் புத்திசாலிதனமாகவும் நியாயமாகவும் செவிசாய்ப்பதில் ஆட்சியாளர்கள் மன்றம் முக்கிய பொறுப்பு வகிக்கிறது என்று அவர் சொன்னார்.

Leave a Reply