தேர்தல் காலத்தில் மட்டும் அன்பு செலுத்தும் எதிர்க்கட்சியினர் ! – தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் சாடல்

Malaysia, News, Politics

 36 total views,  1 views today

– இரா. தங்கமணி –

கோலாலம்பூர் – 18 செப் 2022

22 மாதங்கள் ஆட்சி செய்தபோது இந்திய சமுதாயத்திற்கு நிறைவான சேவையை வழங்காத எதிர்க்கட்சியினர் தேர்தல் காலங்களில் மட்டும் இந்திய சமுதாயத்தின் மீது அன்பு செலுத்துகின்றனர் என்று மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

இந்திய சமுதாயத்திற்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண முற்படாத எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை மட்டுமே முன்வைக்கின்றனர்.

22 மாத ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயத்தைப் புறந்தள்ளிய எதிர்க்கட்சியினர் தேர்தல் காலங்களில் மட்டுமே இந்திய சமுதாயத்தின் மீது அன்பு செலுத்துவர்; அறைகூவல் விடுப்பர்.

வெகு விரைவில் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்பதாலேயே எதிர்க்கட்சியினரின் குரல் தற்போது அதிகமாக ஒலிக்கிறது.

ஆனால் மஇகா அப்படி கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்திற்கான சேவைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை கடந்த கால சம்பவங்கள் எடுத்துரைக்கும்.

ஆதலால் எதிர்க்கட்சியினரின் ஆசை வார்த்தைகளில் இந்திய சமுதாயம் ஏமார்ந்து விடக்கூடாது என்று புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற மஇகா இளைஞர் பணிப்படை அறிமுக நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Leave a Reply