தேர்தல் காலத்தில் மட்டும் தலை காட்டும் கட்சியல்ல மஇகா- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 133 total views,  1 views today

ரா.தங்கமணி

தேர்தல் காலத்தில் மட்டும் மக்களுக்கு சேவையாற்றும் கட்சியல்ல மஇகா. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்றுவதிலிருந்து மஇகா ஒருபோதும் விடுபட்டதில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கிறது.

ஆனாலும் இத்தொகுதியில் மஇகாவின் செயல்பாடுகள் ஒருபோதும் குறைந்ததில்லை.

பதவியும் இல்லாமல், அரசாங்க மானியமும் இல்லாமல் மக்களுக்கான சேவைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தேர்தல் காலத்தில் மட்டுமே தலை காட்டுபவர்கள் நாங்கள் இல்லை.

எவ்வித மானியமும் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று அரேனா சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற தலைகவசம் அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply