தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பில் நஸ்ரி – ம.இ.கா. வாக்குவாதம் : தேமு உடனான உறவை முறித்துவிடுமா ?

Malaysia, News, Politics

 62 total views,  2 views today

கோலாலம்பூர் – 24 ஆகஸ்டு 2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தொடர்பில் அம்னோ – ம.இ.கா. உடனான வாக்குவாதம் தேசிய முன்னணிக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என தாஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியில் அம்னோவின் ஆளுமையால் அக்கட்சியின் முடிவு இறுதி முடிவில் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.

நம்பிக்கைக் கூட்டணி உறுப்புக் கட்சிகளுக்கு ஓரளவுக்கு சமமான உரிமை இருப்பது போல் தேசிய முன்னணி இல்லை.

15வது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியில் ம.இ.கா. போட்டியிடுவது குறித்து அம்னோவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் நஸ்ரி அஸிஸுக்கும் ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வெற்றி பெறும் தொகுதிகளில் மட்டும் ம.இ.கா. போட்டியிட இட ஒதுக்கீடு குறித்து தான் ஶ்ரீ விக்னேஸ்வரனின் கருத்துக்கு அஃது அரசியல் விபச்சாரத்திற்கு ஒப்பாகும் என பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி கூறியிருந்தார்.

அவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த ம.இ.கா.வின் துணைத் தலைவர் கோகிலன் குறிப்பிடுகயில், அதே அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இபுராகிம், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உட்பட பாதிக்கும் மேற்பட்டோர் அதே அரசியல் விபச்சாரிகள் தான் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் 15வது பொதுத் தேர்தலில் ம.இ.கா. 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதை ம.இ.கா. முன்வைத்த பிறகு இந்த வாக்குவாதம் தொடங்கியுள்ளது.

அம்னோ இரக்கம் கொண்டு பிச்சை போட்டதால் மட்டுமே ஜோகூர், மலாக்கா மாநிலத் தேர்தல்களில் ம.இ.கா.வெற்றி பெற்றதாக நஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் அதிகம் பெரும்பான்மை இல்லாதக் காரணத்தால் ம.இ.கா.வை மிகவும் வலுவிழந்த கட்சியாக அம்னோ பார்ப்பதாக சின் மேலும் சொன்னார்.

பெரும்பான்மை இந்தியர்கள் ம.இ.கா. வுக்குத் திரும்பிவிட்டதாக எந்தவிதமான புள்ளி விவரமும் இல்லாதக் காரணத்தால் வலுவான ஆதரவை ம.இ.கா.வுக்கு தேசிய முன்னணி வழங்கவில்லை எனவும் சின் தெரிவித்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் ம.இ.கா.வுக்கு வழங்கப்பட்ட 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் இரண்டும் 18 சட்டமன்றட்ன் தொகுதிகளில் மூன்றையும் வென்றது.

தேர்தல் என்றுமே ஒர் எண் விளையாட்டு. இறுதியில் அம்னோ எடுக்கும் எந்த முடிவுக்கும் ம.இ.கா. கடுப்பட்டு விடும்.

ம.இ,கா.வின் பாரம்பரியத் தொகுதியான சுங்கை சிப்புட்டில் போட்டியிட அக்கட்சி எண்ணம் கொண்டிருந்தாலும் 40% வாக்காளர்கள் மலாய்க்காரர்களாகவும் 30 % சீனர்கள்காகவும் 20% இந்தியர்களாக இருக்கும் நிலையில் அம்னோ அதனை மறுபரிசீலனை செய்யக்கூடும்.

1959 முதல் 1974 வரையில் சுங்கை சிப்புட் நாடாளூமன்றத் தொகுதி அக்கால ம.இ.கா.வின் தலைவர்களான துன் வி தி சம்பந்தன், துன் ச. சாமிவேலு போன்றோரின் வசம் இருந்தது, பின்னர், மலேசிய சோசியலிசக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

தற்போது அத்தொகுதி பிகேஆர் கட்சியின் கேசவன் சுப்ரமணியம் வசம் உள்ளது.

Leave a Reply